அலுவலகத்திற்கு முன்னதாக வந்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட பெண் நீதிமன்றமும் அதிரடி தீர்ப்பு

அலுவலகத்திற்கு முன்னதாக வந்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட பெண் நீதிமன்றமும் அதிரடி தீர்ப்பு

ஸ்பெயினில் ஒரு விசித்திரமான சம்பவத்தில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் பணியாளர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 22 வயதான அந்தப் பெண், காலை 7.30 மணிக்கு வருவதற்குப் பதிலாக 40 நிமிடங்கள் முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் அவர் தொடர்ந்து விதிகளை மீறியதால், நிர்வாகம் அவரை பணியிலிருந்து நீக்கியது. அவர் முன்னதாக வந்தாலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பும் அளிக்கவில்லை என்று நிர்வாகம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தன்னை நீக்கியது தவறு என்று கூறி அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அலிகான்டே நீதிமன்றம் நிறுவனத்தின் முடிவை உறுதி செய்தது. இது நேரத்தைக் கடைப்பிடிப்பது பற்றியது மட்டுமல்ல, நிறுவனத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து மீறிய செயல் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. ஸ்பானிய தொழிலாளர் சட்டத்தின் 54-வது பிரிவின் கீழ் அவர் விதிகளை மீறியுள்ளதாகக் கூறி, ஊழியரின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *