அரசு சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய செவிலியர் அதிரடி சஸ்பெண்ட்
March 10, 2026

கோவை வடவள்ளி துணை சுகாதார நிலையத்தின் கூடுதல் அறைகளை ஆக்கிரமித்து குடியிருப்பாக பயன்படுத்திய விவகாரத்தில் செவிலியர் கனிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடத்தைப் பயன்படுத்தி வந்ததோடு, அங்கு சிகிச்சைக்கான பகுதிகளிலும் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்திருந்தது துறை ரீதியான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
செவிலியரின் கணவர் அரசியல் பொறுப்பில் இருப்பதால் இந்த விதிமீறல் நடந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த முறைகேட்டை கவனிக்கத் தவறிய மாநகர சுகாதார அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதுடன், இனி வரும் காலங்களில் சிகிச்சை மற்றும் குடியிருப்புப் பகுதிகளைத் தனித்தனியாகப் பிரிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.