அரசு ஊழியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களின் இடமாறுதலுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அரசு ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தில்தான் பணியாற்றுவோம் என்பதை ஒருபோதும் உரிமையாகக் கோர முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

நிர்வாக நலன் கருதி அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பணியில் சேரும்போதே எங்கு வேண்டுமானாலும் பணியாற்றச் சம்மதித்தே சேருவதால், அரசின் இடமாறுதல் உத்தரவுகளுக்கு ஊழியர்கள் கட்டுப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *