அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் பின்னணியில் ரஷ்யாவுடன் ஈரான் ரகசிய ஏவுகணை ஒப்பந்தம்

அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் பின்னணியில் ரஷ்யாவுடன் ஈரான் ரகசிய ஏவுகணை ஒப்பந்தம்

அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்க ஈரான் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமார் 589 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, 2500 ஏவுகணைகள் மற்றும் 500 ஏவுதளங்களை ரஷ்யா வழங்கவுள்ளது. தனது அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவே ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அணுசக்தி திட்டங்களை கைவிடாவிட்டால் 10 நாட்களில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த இக்கட்டான நிலையிலும், அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான வரைவு ஒப்பந்தத்தை விரைவில் வாஷிங்டனுக்கு அனுப்ப ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்காப்பு மற்றும் ராஜதந்திரம் என இரண்டு வழிகளிலும் ஈரான் தற்போது காய்களை நகர்த்தி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *