அபிஷேக் ஷர்மாவிற்கு சுனில் கவாஸ்கர் கொடுத்த அதிரடி பேட்டிங் ஆலோசனை
February 23, 2026

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்து அரைஇறுதி வாய்ப்பை சிக்கலாக்கியுள்ளது. இப்போட்டியில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்த அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் குறித்து அதிருப்தி வெளியானது. ரபாடா மற்றும் ஜான்சனின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிய அபிஷேக், ரன்குவிக்க தடுமாறி விக்கெட்டை பறிகொடுத்தார்.
அபிஷேக்கின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர், தென்னாப்பிரிக்காவின் வியூகத்தை அவர் சரியாக கையாளவில்லை என்றார். பெரிய ஷாட்களுக்கு முயலாமல், சிங்கிள்ஸ் எடுத்து ஸ்டிரைக்கை மாற்றியிருந்தால் அழுத்தம் குறைந்திருக்கும் என அறிவுறுத்தினார். வலைப்பயிற்சி போல் அல்லாமல் போட்டியில் நிதானம் அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.