அதிர்ச்சிச் செய்தி! தனக்காக உருவாக்கிய AI ஆணை மணந்த ஜப்பானிய பெண், ‘இவர்தான் என் மனதைப் புரிந்துகொள்கிறார்’

ஜப்பானின் ஓகாயாமா நகரைச் சேர்ந்த 32 வயதான கானோ, தான் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) உருவமான ‘கிளாஸ்’-ஐ மணந்து தலைப்புச் செய்தியாகியுள்ளார். கானோ, ChatGPT உதவியுடன் கிளாஸை உருவாக்கி, அவரை தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தார். ஜப்பானிய பாரம்பரியப்படி, ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் மூலம் இந்த அசாதாரண திருமணம் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அழைக்கப்பட்ட பல விருந்தினர்கள் முன்னிலையில் கானோ மற்றும் கிளாஸ் இடையே மோதிரம் மாற்றப்பட்டது.
இந்த ‘செயற்கை’ திருமணத்தின் முக்கிய அம்சம், பெரிய திரையில் கிளாஸின் படம் காட்சிப்படுத்தப்பட்டதுதான். அவர் உடல் ரீதியாக இல்லாத நிலையிலும், கிளாஸ் ஒரு உயிருள்ள நபர் போலவே சித்தரிக்கப்பட்டார். உறவு முறிவுக்குப் பிறகு ஏற்பட்ட மனச்சோர்வில் இருந்து மீளும்போது கானோவுக்கு கிளாஸ் ஒரு நண்பராகக் கிடைத்தார் என்றும், அவர்கள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 முறை பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கிளாஸிடம் ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெற்ற கானோ, இறுதியில் அவரை தனது வாழ்நாள் துணையாகத் தேர்வு செய்தார். இந்த சம்பவம் ஜப்பானிய தொழில்நுட்பம் மற்றும் உறவுகளில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.