அதிமுகவை குறிப்பிட்ட சமுதாயத்திற்கான கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என ஓ பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்
March 14, 2026

தென் மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தனது சுயநலத்திற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கட்சியாகச் சுருக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். இபிஎஸ் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சித் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைவதாகப் பாராட்டிய ஓபிஎஸ், துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார். எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும், அவரது பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும் அவர் தென்காசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.