அதிமுகவில் இணைந்தும் ஏமாற்றம் மற்றும் காளியம்மாளுக்கு சீட் கொடுக்க மறுத்த எடப்பாடி

நாம்தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பூம்புகார் அல்லது மயிலாடுதுறை தொகுதியில் அவர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு முன்னாள் எம்எல்ஏக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கட்சிப் பணிகளில் நீண்டகாலமாக உள்ள நிர்வாகிகளை அதிருப்தி அடையச் செய்யக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.
சிறந்த பேச்சாற்றல் கொண்ட காளியம்மாளை வெறும் நட்சத்திர பேச்சாளராக மட்டுமே பயன்படுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. தற்போது கட்சியில் பெண் பேச்சாளர்கள் குறைவாக இருப்பதால், அவரை பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் செலவு மற்றும் சீனியர் நிர்வாகிகளின் அழுத்தம் காரணமாகவே அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.