அண்ணாமலைக்கு செக் வைத்த கூட்டணி அரசியல் கோவையில் திடீர் பரபரப்பு
March 27, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் கோவை மாவட்டத்தில் பாஜகவிற்கு ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உட்கட்சி பூசல் மற்றும் அதிமுக தலைமையின் அழுத்தம் காரணமாகவே அவர் ஓரங்கட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தன்னை எதிர்த்த தலைவர்களின் வியூகத்தால் அண்ணாமலை போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். சொந்தக் கட்சியினரே முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றம் சாட்டும் தொண்டர்களால் கோவையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.